ADDED : பிப் 29, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயப்பேட்டை, சென்னை, கோபாலபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நிதின், 49. இவர் கோல்டன் ரெட்ரைவர் வகையைச் சார்ந்த, இரண்டு மாத நாய்க்குட்டியை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நாய்க்குட்டி திடீரென மாயமானது. திருடு போனதை அறிந்து, ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நாய்க்குட்டி திருடியவர்களை தேடி வருகின்றனர்.

