தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சுத்திகரிப்பு மையம் பழுது : குடிநீரின்றி பயணியர் தவிப்பு

 சுத்திகரிப்பு மையம் பழுது : குடிநீரின்றி பயணியர் தவிப்பு

 சுத்திகரிப்பு மையம் பழுது : குடிநீரின்றி பயணியர் தவிப்பு


ADDED : பிப் 16, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மெரினாவில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் செயல்படாததால், சுற்றுலா பயணியர் சிரமப்பட்டனர்.

மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, நான்கு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது.

மேலும், சில மாதங்களுக்கு முன் குடிநீர் வாரியம் வாயிலாக, ஏ.டி.எம்., எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் அமைக்கப்பட்டது.

இவை அனைத்தும், தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் பயணியர் வேறு வழியின்றி, மணற்பரப்பில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு பாட்டில் குடிநீரை வாங்கி பருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

குடிநீர் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us