/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்சோ குற்றவாளிக்கு '5 ஆண்டு' சிறை லோகோ வைக்கவும்
/
போக்சோ குற்றவாளிக்கு '5 ஆண்டு' சிறை லோகோ வைக்கவும்
போக்சோ குற்றவாளிக்கு '5 ஆண்டு' சிறை லோகோ வைக்கவும்
போக்சோ குற்றவாளிக்கு '5 ஆண்டு' சிறை லோகோ வைக்கவும்
ADDED : ஆக 07, 2025 12:29 AM

அம்பத்துார், அம்பத்துார் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், 36 வயது பெண், கடந்த 2022ம் ஆண்டு, அம்பத்துார் மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தன், 11 வயது மகளை, வீட்டின் அருகே வசித்து வந்த செந்தில், 35, என்பவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, மகளிர் போலீசார், செந்திலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி நேற்று தண்டனை விபரங்களை அறிவித்தார். அதில், செந்திலுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.