/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் மறியல் பெரம்பூரில் நெரிசல்
/
மாற்றுத்திறனாளிகள் மறியல் பெரம்பூரில் நெரிசல்
ADDED : பிப் 21, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்:பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே, பார்வையற்ற கல்லுாரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலைவாய்ப்பில் பார்வையற்றோருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு, வேலை இல்லாதோருக்கான உதவித்தொகையை 1,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி தருவது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பியம் போலீசார், மறியலில் ஈடுபட்டோரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பெரம்பூர்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

