/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு: ஸ்தம்பித்த போக்குவரத்து
/
மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு: ஸ்தம்பித்த போக்குவரத்து
மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு: ஸ்தம்பித்த போக்குவரத்து
மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு: ஸ்தம்பித்த போக்குவரத்து
ADDED : பிப் 18, 2024 12:00 AM
தேனாம்பேட்டை, தமிழக அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான 1 சதவீத உள் ஒதுக்கீட்டை, அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வை மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், நேற்று தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பின், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
இதனால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டோரை, வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அகற்ற முற்பட்டனர்.
இதன் காரணமாக, போலீசார் மற்றும்- மாற்றுத்திறனாளிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளோடு, அமைச்சர் கீதாஜீவன் சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் கமிஷனரகத்தில் பேச்சு நடத்தினார்.