/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே உணவக குறைகளை கூற க்யூ.ஆர்., குறியீடு வசதி
/
ரயில்வே உணவக குறைகளை கூற க்யூ.ஆர்., குறியீடு வசதி
ரயில்வே உணவக குறைகளை கூற க்யூ.ஆர்., குறியீடு வசதி
ரயில்வே உணவக குறைகளை கூற க்யூ.ஆர்., குறியீடு வசதி
ADDED : நவ 13, 2025 12:47 AM
ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களின் குறைகளை, க்யூ.ஆர்., குறியீடு வாயிலாக தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
செ ன்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உணவகங்களிலும் குறைகளை பதிவு செய்யும் வகையில் முதன் முறையாக, க்யூ.ஆர்., குறியீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன்படி, உணவக க்யூ.ஆர்., குறியீட்டை பயணியர் மொபைல் போனில் ஸ்கேன் செய்யலாம். அதில், உணவக இருப்பிடம், நிலையக்குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும். 'ரயில் மதத்' என்ற ரயில்வேயின் பயணியர் குறை தீர்ப்பு செயலிக்குள் தானாக நுழையலாம்.
அதில் தங்கள் மொபைல்போன் எண்ணைக் குறிப்பிட்டு, ஓ.டி.பி., வந்ததும், புகார்களை தெரிவு செய்து, சுருக்கமாக விபரிக்கலாம். குறிப்பு எண்ணுடன் புகாருக்கான ஒப்புகைச் சீட்டும், ரயில் செயலியில் அனுப்பி வைக்கப்படும். புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

