தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குவாண்டம் ஹேக்கத்தான் போட்டி: ஆர்.ஐ.டி., கல்வி நிறுவனம் சாதனை

குவாண்டம் ஹேக்கத்தான் போட்டி: ஆர்.ஐ.டி., கல்வி நிறுவனம் சாதனை

குவாண்டம் ஹேக்கத்தான் போட்டி: ஆர்.ஐ.டி., கல்வி நிறுவனம் சாதனை


UPDATED : ஆக 01, 2026 07:23 PM

ADDED : ஆக 01, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2026 07:23 PM ADDED : ஆக 01, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரி எனும் ஆர்.ஐ.டி., கல்வி நிறுவனம், 36 மணி நேர இடைவிடாத குவாண்டம் ஹேக்கத்தான் நிகழ்வை நடத்தி, சாதனை படைத்துள்ளது.

'குவாண்டம்' தொழில்நுட்பத் துறையில், மாணவர்களின் புதுமை திறனையும், ஆராய்ச்சி மனப்பாங்கையும் ஊக்குவிக்கும் வகையில், சென்னை ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரி, 36 மணி நேர இடைவிடாத சர்வதேச குவாண்டம் ஹேக்கத்தான் நிகழ்வை நடத்தி, சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில், நாட்டின் ஒன்பது மாநிலங்களில் உள்ள, 23 நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் பங்கேற்று, எதிர்கால தொழில்நுட்ப தேவைகளுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்கினர்.

நிகழ்ச்சியில், ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஹரீ சங்கர் மேகநாதன் பேசியதாவது:

எதிர்கால உலகிற்கு தேவையான திறன்களுடன், மாணவர்களை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களின் முக்கிய பொறுப்பாகும்.

அதற்காக, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை, மாணவர்கள் ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்ளும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

இத்தகைய முயற்சிகள், மாணவர்களை வழக்கமான சிந்தனையை தாண்டி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்; எதிர்கால தொழில்நுட்ப முன்னோடிகளாக உருவாக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஆந்திர மாநில குவாண்டம் இயக்கத்தின், அமராவதி குவாண்டம் பள்ளத்தாக்கு திட்ட இயக்குநர் ஸ்ரீதர், ஐ.பி.எம்., குவாண்டம் இந்திய துாதர் தினகரன் வினாயகமூர்த்தி, 'க்யூபிட் போர்ஸ்' தலைமை செயலர் அலுவலர் வெங்கட சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

**

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us