/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குவாண்டம் ஆராய்ச்சி மையம் ராஜலட்சுமி கல்லுாரியில் துவக்கம்
/
குவாண்டம் ஆராய்ச்சி மையம் ராஜலட்சுமி கல்லுாரியில் துவக்கம்
குவாண்டம் ஆராய்ச்சி மையம் ராஜலட்சுமி கல்லுாரியில் துவக்கம்
குவாண்டம் ஆராய்ச்சி மையம் ராஜலட்சுமி கல்லுாரியில் துவக்கம்
ADDED : செப் 09, 2025 01:20 AM

சென்னை சென்னை ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், குவாண்டம் ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டது.
சென்னை ஆர்.ஐ.டி., எனும், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கல்வி நிறுவனத்தில், இந்தியாவின் முதல் குவாண்டம் ஆராய்ச்சி மையம் துவக்க நிகழ்வு நேற்று நடந்தது.
ஆராய்ச்சி மையத்தை துவக்கி வைத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி குழுமம், 2008 முதல் இன்று வரை நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். முதல் தலைமுறை மற்றும் கிராமப்புற மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.
தற்போது துவக்கப்பட்டுள்ள குவாண்டம் ஆராய்ச்சி மையம், தமிழகத்தை உலகளாவிய ஆராய்ச்சி வரைபடத்தில், முன்னணி இடத்தில் நிலை நிறுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜலட்சுமி கல்வி குழும தலைவர் தங்கம் மேகநாதன் பேசுகையில், ''உழைப்பும், நேர்மையும் மாணவர்களின் வெற்றிக்கான முக்கிய அம்சங்கள். வாழ்க்கையில் எளிய வழிகள் கிடையாது. கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துங்கள்,'' என்றார்.
ஐ.பி.எம்., குவாண்டம் இந்தியா தலைவர் வெங்கடா சுப்பிரமணியம் பேசுகையில், ''கணினிகள், இணையதளம், ஏ.ஐ., போன்று, குவாண்டம் கணினியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குவாண்டம் ஆராய்ச்சியை, மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் துணை தலைவர் ஹரி சங்கர் மேகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.