/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெரு நாய்களுக்கு நாளை முதல் 'ரேபிஸ்' தடுப்பூசி முகாம்
/
தெரு நாய்களுக்கு நாளை முதல் 'ரேபிஸ்' தடுப்பூசி முகாம்
தெரு நாய்களுக்கு நாளை முதல் 'ரேபிஸ்' தடுப்பூசி முகாம்
தெரு நாய்களுக்கு நாளை முதல் 'ரேபிஸ்' தடுப்பூசி முகாம்
ADDED : ஆக 08, 2025 12:10 AM
சென்னை சென்னையில் உள்ள தெருநாய்களுக்கு, நாளை முதல் மெகா, 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி முகாம் நடத்த, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 1.88 லட்சம் தெருநாய்கள், 25,000க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் உள்ளன. பல இடங்களில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடாததாலும், வளர்ப்பு நாய்கள் முறையாக மாநகராட்சியில் பதிவு செய்யப்படாமல் இருப்பதாலும், அவ்வப்போது நாய்க்கடி சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இவற்றை தவிர்க்க, 50 நாட்களில், 1.5 லட்சம் நாய்களுக்கு, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்த, 30 குழுக்களை மாநகராட்சி அமைத்துள்ளது. தினமும், 3,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கால்நடை மருத்துவ குழுக்கள், நேரடியாக தெருக்களுக்கே சென்று, நாய்களை பிடித்து தடுப்பூசி போடுவர். தடுப்பூசி போடும் நாய்களுக்கு அடையாள மை தெளிக்கப்படும். இந்த முகாம் நாளை துவங்க உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***