/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
/
தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி
ADDED : பிப் 18, 2024 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து, அவ்வளாகத்தில் சுற்றித்திரிந்த தெருநாய்களுக்கு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் முகாம், நேற்று நடந்தது.
இம்முகாமை, தெருநாய்களுக்கு தடுப்பூசி போட்டு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மேலும், மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து பேசினார்.
தெருநாய்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என, கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.