ADDED : ஏப் 16, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சூளை வி.வி.,கோவில் தெருவைச் சேர்ந்தவர் காஞ்சனா, 40. அவர் மூத்தமகன் விஜயகுமாருக்கு, 17,000 ரூபாயிலான ரேஸ் சைக்கிள் ஒன்றை, சில மாதங்களுக்கு முன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ரேஸ் சைக்கிளை, மர்மநபர் திருடிச் சென்றார்.
பொதுமக்கள் உதவியுடன், சைக்கிள் திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர், வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், சூளையை சேர்ந்த சசிகாந்த், 47 என்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்து. சசிகாந்தை கைது செய்த போலீசார், சைக்கிளை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

