ADDED : ஜூலை 24, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், ஸ்ரீ கீத கோவிந்த மண்டலியின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, நேற்று பெரம்பூர் சங்கராலயத்தில் ராதா கல்யாண உத்சவம் துவங்கியது.
வரும் 27ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்வில், 25ம் தேதி வரை பெரம்பூர் சங்கரலாயத்திலும், 26 மற்றும் 27ம் தேதிகளில் பெரம்பூர் அய்யப்பன் கோவிலிலும் நடக்க உள்ளது.
நேற்று மாலை கார்த்திக் பாகவதரின் நாம சங்கீர்த்தனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. வரும் 27ம் தேதி காலை 9:30 மணிக்கு, ஸ்ரீ ராதா கல்யாண உத்சவம் நடக்கிறது.