தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு நாளை திறப்பு

 ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு நாளை திறப்பு

 ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு நாளை திறப்பு


ADDED : ஜன 06, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குரோம்பேட்டை: குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிந்ததை அடுத்து, நாளை துணை முதல்வர் உதயநிதி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட்டை, தினமும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். அந்த கேட் மூடப்படும் போது, ஜி.எஸ்.டி., சாலை, ராதா நகர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால், இலகுரக வாகனங்கள் சென்று வர வசதியாக, அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 2007ல் துவங்கியது. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன.

கடந்த 2019ல், சுரங்கப்பாதை திட்டத்திற்கான பணிகளை துவக்க வசதியாக, 46 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

தொடர்ந்து, 15.47 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை பணிகள் துவங்கின. கடந்த ஆண்டு, இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அது நடக்கவில்லை.

பின், இருவழிப்பாதையான இச்சுரங்கப்பாதைக்கு வாகனங்கள் எளிதாக திரும்புவதற்கும், சுரங்கப்பாதையை ஒட்டி நடைபாதை அமைக்கவும், ரயில்வே இடத்தில் 100 அடி நீளத்திற்கு, 10 அடி அகலம் நிலம் பெறப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தன.

இப்பணிகள் முடிந்ததை அடுத்து, பல ஆண்டுகள் போராட்டமான ராதா நகர் சுரங்கப்பாதை, நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. துணை முதல்வர் உதயநிதி, இச்சுரங்கப்பாதையை திறந்து வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us