/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராதா நகரில் இருவழி சுரங்கப்பாதை மே மாதம் திறப்பதாக அறிவிப்பு
/
ராதா நகரில் இருவழி சுரங்கப்பாதை மே மாதம் திறப்பதாக அறிவிப்பு
ராதா நகரில் இருவழி சுரங்கப்பாதை மே மாதம் திறப்பதாக அறிவிப்பு
ராதா நகரில் இருவழி சுரங்கப்பாதை மே மாதம் திறப்பதாக அறிவிப்பு
ADDED : பிப் 07, 2024 12:03 AM

குரோம்பேட்டை,குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி., - 27 அமைந்துள்ள பகுதியை, தினமும் இரண்ட லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட்டை மூடும்போது, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் ராதா நகர் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் கேட் பகுதியில், 2007ல் சுரங்கப்பால பணிகள் துவக்கப்பட்டன. ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன.
கடந்த 2019, ஜூன் மாதத்தில், சுரங்கப்பாதை திட்டத்திற்கான பணிகளை துவக்க ஏதுவாக, 46 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. தொடர்ந்து, 15.47 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை பணிகள் துவங்கின.
தண்டவாளத்தின் கிழக்கு பகுதியில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், 2022 ஜூன் மாதம் தடையில்லா சான்று கிடைத்ததை அடுத்து, மேற்கு பகுதியில் பணிகள் துவங்கின. மேற்கு பகுதியான ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
சாலை வழியாக வரும் பொதுமக்கள், நேரடியாக ரயில் நிலைய நடைபாதைக்கு செல்ல, சுரங்கப்பாதையின் மேற்பகுதியில், பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை மையப்பகுதியில் நடைமேம்பாலத்தில் துாண்கள் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. மேற்கு பகுதியில், 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன. கிழக்கு பகுதியில், 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இப்பணிகளை, நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து, மே மாதம் சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சுரங்கப்பாதை இருவழிப்பாதை உடையது. இதற்கு ஏற்றார் போல், வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, பணிகளை வேகப்படுத்தி, மே மாதம் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்கு வந்தால், இலகு ரக வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கும்.
- இ.கருணாநிதி,
பல்லாவரம்தி.மு.க., எம்.எல்.ஏ.,

