ADDED : பிப் 03, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டைபம்மல், நாகல்கேணி சற்குணம் சாலையில், எம்.டிசைன் என்ற தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், வருவான வரி கணக்குகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.
இங்கு நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர் திலிப் கபூர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
'இது, வருமான வரி கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், வழக்கமாக நடைபெறும் சோதனை' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

