/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் 'ரெய்டு' 5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் 'ரெய்டு' 5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
அடுக்குமாடி குடியிருப்புகளில் 'ரெய்டு' 5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
அடுக்குமாடி குடியிருப்புகளில் 'ரெய்டு' 5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்
ADDED : ஜூலை 26, 2025 11:51 PM
மறைமலைநகர் :பொத்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை புறநகர், மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் பல்கலை உள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
இவர்கள், விடுதி, அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து தங்கி, பல்கலைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் மாணவ - மாணவியரை குறிவைத்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக புகார் எழுந்தது.
மெகா சோதனை இதுகுறித்து, தாம்பரம் போலீஸ் கமிஷனரக போலீசார், ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பல்கலையை ஒட்டியுள்ள பொத்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மொத்தம் 20 குழுக்களாக பிரிந்து, 5 கிலோ போதை சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இவற்றை வைத்திருந்த வட மாநில வாலிபர்கள் இருவரை கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆக., மாதம் 1,000 போலீசார் 168 குழுக்களாக பிரிந்து, இதே பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்; 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தவிர, உரிமை கோராத 60 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.