ADDED : அக் 26, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பில் நடந்த ரவுடி வேட்டையில், சந்தேகத்தின் படி ஆறு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ஏ- பிரிவு ரவுடி, புளியந்தோப்பு, கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த துரை, 65, வல்லரசு, 23, கதிரவன், 21, புளியந்தோப்பு, கன்னிகா புரத்தைச் சேர்ந்த சுகனேஷ், 22, சேத்துபட்டு தாஸ் புரத்தைச் சேர்ந்த இளங்கோவன், 51, புளியந்தோப்பைச் சேர்ந்த விக்னேஷ், 28, ஆகிய ரவுடிகளை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கின்றனர்.