/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டவாள பராமரிப்பு பணி மெட்ரோ சேவையில் மாற்றம்
/
தண்டவாள பராமரிப்பு பணி மெட்ரோ சேவையில் மாற்றம்
ADDED : செப் 06, 2025 11:18 PM
சென்னை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, வரும் 9ம் தேதி முதல் அக்., 19 வரை, மெட்ரோ ரயில் சேவையில், சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் -- பரங்கிமலை வழித்தடத்திலும், விம்கோ நகர் -- விமான நிலைய வழித்தடத்திலும், தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள், இரு வழித்தடங்களிலும், வரும் 9ம் தேதி முதல் அக்., 19 வரை காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை நடக்கும்.
இந்தக் காலகட்டத்தில் ரயில்கள் காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான, 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
காலை 6:30 மணிக்குப் பின், மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இன்றி இயங்கும்.
பராமரிப்புப் பணி காரணமாக, பயணியர் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை, 1860- 425 -1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***