/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய்களுக்கான திறன் போட்டி ரயில்வே 'ஜான்சி' சாதனை
/
நாய்களுக்கான திறன் போட்டி ரயில்வே 'ஜான்சி' சாதனை
ADDED : பிப் 16, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, உத்தர பிரதேச மாநிலத்தில், 67வது தேசிய காவல் துறை திறன் சார் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், நாடு முழுதும் இருந்து காவல் துறை, ராணுவம், ரயில்வே உள்ளிட்ட பல்துறையினர் பங்கேற்றனர்.
இதில், மோப்ப நாய்களுக்கான நுண்ணறிவு திறன் போட்டியில், மொத்தம் 47 நாய்கள் பங்கேற்றன. போட்டியில், சென்னை ரயில்வே பாதுகாப்பு படை பெண் நாய் ஜான்சி, தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஜான்சியின் பயிற்சியாளர் கார்த்திக் மற்றும் ஆர்.எஸ்.மீனா ஆகியோரை, தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உயதிகாரிகள் பாராட்டினர்.