/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் பாதைகளில் வீடியோ எடுத்தால் 3 ஆண்டு சிறை ரயில்வே அறிவிப்பு
/
ரயில் பாதைகளில் வீடியோ எடுத்தால் 3 ஆண்டு சிறை ரயில்வே அறிவிப்பு
ரயில் பாதைகளில் வீடியோ எடுத்தால் 3 ஆண்டு சிறை ரயில்வே அறிவிப்பு
ரயில் பாதைகளில் வீடியோ எடுத்தால் 3 ஆண்டு சிறை ரயில்வே அறிவிப்பு
ADDED : டிச 06, 2025 05:17 AM
சென்னை: 'ரயில் நிலையங்கள், பாதைகளில் 'வீடியோ' எடுத்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளில் உரிய அனுமதி இன்றி, போட்டோ, வீடியோ எடுக்க அனுமதி இல்லை. சமீப காலமாக சிலர், ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களில் வீடியோ செய்து ரீல்ஸ் செய்வது அதிகரித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு, ரயில்வே குறித்து எதிர்மறையாக சித்தரித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, ரயில்வே சட்டம் - 1989 கீழ் ந டவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே அலுவலர்கள் உடைய குழுவினர் சோதனை நடத்தும்போது, இதுபோன்ற வீதிமீறல்களில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டோருக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.