/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியர் திண்டாட்டத்தை தீர்க்க முடியாமல்... திணறும் ரயில்வே! 49 ரயில்களை 'கட் சர்வீஸ்' ஆக மாற்றியதால் சிக்கல்
/
பயணியர் திண்டாட்டத்தை தீர்க்க முடியாமல்... திணறும் ரயில்வே! 49 ரயில்களை 'கட் சர்வீஸ்' ஆக மாற்றியதால் சிக்கல்
பயணியர் திண்டாட்டத்தை தீர்க்க முடியாமல்... திணறும் ரயில்வே! 49 ரயில்களை 'கட் சர்வீஸ்' ஆக மாற்றியதால் சிக்கல்
பயணியர் திண்டாட்டத்தை தீர்க்க முடியாமல்... திணறும் ரயில்வே! 49 ரயில்களை 'கட் சர்வீஸ்' ஆக மாற்றியதால் சிக்கல்
ADDED : பிப் 25, 2026 06:26 AM

சென்னை: கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், 44 மின்சார ரயில்கள் ரத்தால், ஐந்து நாட்களாக பயணியர் திண்டாட்டம் தொடரும் நிலையில், 'கட் சர்வீஸ்' என்ற அடிப்படையில், மேலும் 49 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வேயின் சரியான திட்டமிடல் இல்லாததுதான் சிக்கலுக்கு காரணம் என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் குற்றம் சாட்டியுள்ளார்.
பரங்கிமலை - வேளச்சேரி மேம்பால இணைப்பு ரயில் சேவையை தாமதமின்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், 735 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பிரமாண்ட நடைமேம்பால பணிகள், நடைமேடை 10, 11ல் துவங்கி யுள்ளதால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், ஏப்., 5 வரை, 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்வதாக, ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தடத்தில், 208 ஆக இருந்த மின்சார ரயில்களின், 164 ஆக குறைந்தது.
பயணியர் அவதி சேவை குறைந்தாலும், சேத்துப்பட்டில் இருந்து எழும்பூர் வழியாக, பூங்கா செல்லும் ரயில் பாதையில் தாமதம் ஏற்படுவது பயணியருக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த இடைப்பட்ட துாரத்தை கடக்க மட்டுமே, 30 நிமிடங்களுக்கு மேலாகிறது. மேலும், மின்சார ரயில்களும் வரிசையாக நின்றன.
இதனால், மின்சார ரயிலில் செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்ல வேண்டிய பயணியர் நெரிசலில் சிக்கி நேற்றும் அவதிப்பட்டனர்.
அதுபோல், புறநகர் மின்சார ரயில் நிலையங்களில், 30 நிமிடங்கள் வரை காத்திருந்தனர். இதுபோன்ற சிக்கல் உள்ள நிலையில், மேலும் 49 ரயில்களின் சேவை குறைக்கப்பட்டு ௧௧௫ ஆக மாற்றப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் மின்சார ரயில் இயக்கத்தில், பல்வேறு மாற்றங்களுடன், திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, செங்கல் பட்டு - கடற்கரை இடையே 49 ரயில் சேவைகள் குறைக்கப் பட்டுள்ளன. அவை எழும்பூர் மற்றும் பரங்கிமலையில் இருந்து கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு வரை, 'கட் சர்வீஸ்'களாக நேற்று முதல் இயக்கப்படுகின் றன. இந்த ரயில்கள் ஏப்., 5 வரை இயக்கப்படும்.
இந்த ரயில்கள், பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையங்களில் நிற்காது.
புறநகர் 'ஏசி' மின்சார ரயில், அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களின் சேவை, ஞாயிறு சேவையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல், கும்மிடிப் பூண்டி - தாம்பரம் ரயில்கள், செங்கல்பட்டு வரை தற்காலிகமாக நீட்டித்து இயக்கப்படும் என சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது .
கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்கள் ரத்தால், 20,000 பேர், பேருந்து, மெட்ரோ ரயில் என, மாற்று போக்குவரத்து வசதிக்கு மாற்றி இருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளச்சேரி - பரங்கிமலை இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டு உள்ளதால், பயணியர் பாதிப்பு தொடர்கிறது.
இன்னமும் அறிவித்தப்படி, 15 முதல் 20 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கு வதில்லை. மின்சார ரயில்களின் தாமதம் தொடர்கிறது.
எழும்பூர், பரங்கி மலையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இயக்குவது வரவேற்கத்தக்கது. இதெல்லாம் முன் கூட்டியே திட்டமிட்டு இருக்க வேண்டும்.
மேலும், 17 ஆண்டு களுக்கு பின் ஒருவழியாக, வேளச்சேரி - பரங்கிமலையில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது.
பணிகள் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில், உரிய ஒப்புதல் பெற்று ரயில் சேவையை துவக்க வேண்டும். இந்த சேவை பயன்பாட்டிற்கு வந்திருந்தால், கடற்கரைக்கு பயணியருக்கு மாற்று ரயில் சேவை கிடைத்திருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

