/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறுவனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு திருப்பி விடப்படும் மழைநீர்: மக்கள் முற்றுகை

ADDED : அக் 24, 2025 01:59 AM

திருவொற்றியூர்: கே.சி.பி., நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீரால், குடியிருப்பு பகுதி பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர், ஏழாவது வார்டு,வெற்றி விநாயகர் நகரில், எட்டு தெருக்களில், ஐந்து தெருக்களுக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
வடிகால் பணி விடுபட்ட மூன்று தெருக்களில் மட்டும், மழைநீர் தேக்கம் இருக்கும். அங்கு மோட்டார் வைத்து மழைநீர் அப்புறப்படுத்தப்படும். இந்நிலையில், இரு தினங்களாக மழை நின்றிருந்த நிலையிலும், அந்த தெருவில் மழைநீர் தேங்கியிருந்தது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட போது, கே.சி.பி., நிறுவன மதில் சுவர் வழியாக, மழைநீர் வெளியேறுவது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று காலை அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் ரயில் நிலையம், பேசின் சாலையில் அமைந்துள்ள, கே.சி.பி., நிறுவன நுழைவாயில் பகுதிக்கு சென்று, வெளியேறும் மழைநீரை நிறுத்தக்கோரி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கவுன்சிலர் கார்த்திக்கும் பங்கேற்றார்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதையடுத்து மழைநீர் வெளியேற்றுவது தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுப்பதாக, நிறுவன அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் கலைந்து சென்றனர்.