/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2ம் நாளாக தேங்கும் மழைநீர்
/
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2ம் நாளாக தேங்கும் மழைநீர்
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2ம் நாளாக தேங்கும் மழைநீர்
கோடம்பாக்கம் மண்டலத்தில் 2ம் நாளாக தேங்கும் மழைநீர்
ADDED : டிச 02, 2024 01:32 AM

கோடம்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட மேற்கு மாம்பலம், தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், இரண்டாவது நாளாக மழைநீர் தேங்குவதால், பகுதிமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ‛பெஞ்சல்' புயல் தாக்கத்தால் நேற்று முன்தினம் பெய்த கன மழையில், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட கே.கே., நகர், விருகம்பாக்கம், தி.நகர், மேற்கு மாம்பலம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நேற்று மழை விட்டும், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. அத்துடன், குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், பகுதிமக்கள் அவதிப்பட்டனர்.
இதில், கே.கே., நகர் பாரதிதாசன் காலனி மாநகராட்சி பூங்காவில், குளம் போல் மழைநீர் தேங்கியது. மேற்கு மாம்பலம், எல்லையம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, ஸ்டேஷன் சாலை, சம்பங்கி தெரு, கோதண்டராமர் கோவில் தெரு, பாபு ராஜேந்திர பிரசாத் முதலாவது தெரு உள்ளிட்ட சாலைகளில், மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெரு அருகே உள்ள சம்பங்கி தெரு மற்றும் மேட்லி சுரங்கப்பாதை அருகே உள்ள பாபு ராஜேந்திர பிரசாத் தெரு உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளில் மழைநீர் புகுந்தது.
அதேபோல் கோடம்பாக்கம், அஜீஸ் நகர், சுப்பிரமணிய நகர், சுப்பிரமணிய நகர் 1 மற்றும் 2வது தெரு, பராங்குசபுரம், ரங்கராஜபுரம் பிரதான சாலை, வாத்தியார் தோட்டம் பிரதான சாலை, வாத்தியார் தோட்டம், 1 மற்றும் 2வது தெரு, முருகன் தெரு, சுப்பராயன் நகர் 5வது தெரு, கர்ணன் தெரு, கே.கே., நகர் காமராஜர் சாலை, அசோக் நகர், 86வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக மழைநீர் தேங்கியது.
இதில் அஜீஸ் நகர், பராங்குசபுரம், கர்ணன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டனர்.