/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.18 கோடியில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்
/
ரூ.18 கோடியில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்
ADDED : மார் 27, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம், கே.கே., நகர் உள்ளிட்ட பகுதியில், கடந்தாண்டு மழைநீர் தேங்கியது.
இதனால், விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெரு, சக்தி நகர், காமராஜர் நெடுஞ்சாலை, கே.கே., நகர் விஜயராகவபுரம் 5வது தெரு, கே.கே., நகர் 39, 44, 59வது தெரு, பாரதிதாசன் காலனி பிரதான சாலை என, 10 இடங்களில் வடிகால்வாய் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, 18.12 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.