/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு மணி நேரத்தில் மழைநீர் அகற்றம்: - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
/
ஒரு மணி நேரத்தில் மழைநீர் அகற்றம்: - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
ஒரு மணி நேரத்தில் மழைநீர் அகற்றம்: - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
ஒரு மணி நேரத்தில் மழைநீர் அகற்றம்: - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
ADDED : டிச 01, 2024 09:41 PM
சென்னை:தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க., சட்ட திட்ட திருத்த குழு சார்பில், சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் விடுதியில், கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், சட்ட திட்ட திருத்த குழு செயலர் கிரிராஜன் எம்.பி., தலைமை வகித்தார். தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க., தலைவர் கருணாநிதியால், 1968ல், இந்த பார்வையற்றோருக்கான இல்லம் திறக்கப்பட்டது. அதே இடத்தில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது பெய்த வரலாறு காணாத மழையில், தி.மு.க., எவ்வாறு செயல்பட்டது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
தி.மு.க.,வுடன் இணைந்து, சென்னை மாநகராட்சி ஊழியர்கள், மழை நின்ற ஒரு மணி நேரத்திற்குள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நான் நகராட்சி நிர்வாகியாக பணியில் இருந்தபோது, இதுபோல விரைவான பணிகளை மேற்கொள்ளவில்லை. தற்போது ஒரு மணி நேரத்தில் அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.