/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுரங்கப்பாதையில் மழைநீர் கசிவு குடை பிடித்தபடி செல்லும் மக்கள்
/
சுரங்கப்பாதையில் மழைநீர் கசிவு குடை பிடித்தபடி செல்லும் மக்கள்
சுரங்கப்பாதையில் மழைநீர் கசிவு குடை பிடித்தபடி செல்லும் மக்கள்
சுரங்கப்பாதையில் மழைநீர் கசிவு குடை பிடித்தபடி செல்லும் மக்கள்
ADDED : நவ 08, 2024 12:23 AM

திருவொற்றியூர், பலவீனமான சுரங்கப்பாதையில் மழைநீர் கசிவதால், மக்கள் குடைபிடித்தபடி செல்லும் அவலம் தொடர்கிறது.
திருவொற்றியூர் மண்டலம், மாணிக்கம் நகர் - அம்பேத்கர் நகரை இணைக்கும் வகையில், ரயில்வே தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்கப்பாதையை திருவொற்றியூர் மேற்கு பகுதியின் அம்பேத்கர் நகர், ராஜ சண்முகம் நகர், சரஸ்வதி நகர், சிவசக்தி நகர், கலைஞர் நகர்.
கலைவாணர் நகர், ஜோதி நகர், பூம்புகார் நகர், சண்முகபுரம் உட்பட, 20க்கும் மேற்பட்ட பகுதிலுள்ள, 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர் கிழக்கு - நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், கல்வி நிலையங்கள் இருப்பதால், சுரங்கப்பாதை வழியாக தான், மேற்கு பகுதி மக்கள் சென்றாக வேண்டும்.
மழைக்காலங்களில், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும். அதுபோன்ற நேரங்களில், ராட்சத மின்மோட்டார்கள் வழியாக, மழைநீர் அகற்றப்படும்.
இதற்கிடையில், சுரங்கப்பாதை கட்டி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால், மேல்புறம் மற்றும் பக்கவாட்டில் மழைநீர் கசிவு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, சுரங்கப்பாதைக்குள் செல்லும் பாதசாரிகள் குடைபிடித்தபடி செல்ல வேண்டியுள்ளது. மேலும், மழைநீர் கசிவு காரணமாக சுரங்கப்பாதை பலவீனமாகி விட்டதாக, மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சுரங்கப்பாதையில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.