சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
ADDED : செப் 11, 2026 05:32 PM
திருநின்றவூர்: திருநின்றவூர் நகராட்சி, கோமதிபுரம், ஏழாவது பிரதான சாலையில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வடிகால் வசதி இல்லை; சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது.
இங்குள்ள ஐந்து, ஆறு, எட்டு மட்டும் ஒன்பதாவது பிரதான சாலைகளில், சில மாதங்களுக்கு முன் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
இதனால், ஏழாவது பிரதான சாலை தாழ்வான பகுதியாக மாறியுள்ளது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இச்சாலையில் தேங்குவது வாடிக்கையாகி உள்ளது.
சில நாட்களாக பெய்து வரும் மழையால், கோமதிபுரதம் ஏழாவது பிரதான சாலையில், முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. தேங்கிய நீரில் செல்ல, பள்ளி மாணவ – மாணவியர், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து திருநின்றவூர் நகராட்சி மற்றும் முதல்வர் தனிப்பரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பருவமழை தொடங்கும் முன், ஏழாவது பிரதான சாலையை சீரமைத்து, மழைநீர் வெளியேற வடிகால் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
