ADDED : அக் 13, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:சிட்லப்பாக்கம் ஏரியை பாதுகாக்கக்கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லப்பாக்கத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் சிட்லப்பாக்கம் ஏரி உள்ளது. கழிவு நீர் கலந்து ஏரி மாசுபட்டுள்ளது.
ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி மாணவர்கள், குடியிருப்பு நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்து நேற்று பேரணி நடத்தினர்.
சிட்லப்பாக்கம் ஏரியின் அருகே துவங்கிய பேரணி, எம்.ஐ.டி., மேம்பாலம் அருகே முடிந்தது. பேரணியில் பங்கேற்றோர், 'கழிவுநீர் கலப்பை தடுப்போம்; ஏரியை காப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.