ADDED : ஜன 20, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கநல்லுார், அயோத்தி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் சார்பில் கட்டப்பட்டு வரும் கோவில் கருவறையில், ராமர் சிலை பிராணப்பிரதிஷ்டை, 22ம் தேதி நடக்க உள்ளது.
இதன் நேரலை நிகழ்ச்சி, நங்கநல்லூர், ராம் நகர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள ஸ்ரீ ராம மந்திரம் வளாகத்தில் ஜன., 22ம் தேதி நண்பகல் 12:00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கலாம்.
அனைவருக்கும் பவமான அன்னதானா டிரஸ்ட் சார்பாக, மஹா பிரசாதம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.