/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமச்சந்திரா பல்கலை 40வது பட்டமளிப்பு விழா
/
ராமச்சந்திரா பல்கலை 40வது பட்டமளிப்பு விழா
ADDED : அக் 16, 2025 12:50 AM

போரூர்: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலையின் 40வது பட்டமளிப்பு விழா, போரூரில் உள்ள பல்கலை அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான 'ஜோஹோ' ஐ.டி., நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார். பல்வேறு பாடப் பிரிவுகளில் 1,871 மாணவ - மாணவியருக்கு பட்டங்களும், சாதித்த 75 மாணவ - மாணவியருக்கு தங்க பதக்கங்களும் வழங்கப்பட்டன.
பின், 'ஜோஹோ' நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு பேசியதாவது:
அதிநவீன தொழில்நுட்பம் நமக்கு தேவைப்படும்போது, வெளிநாடுகள் நமக்கு அளிப்பதில்லை. ஏனென்றால் நாம் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக வளரக்கூடாது என்ற எண்ணம் தான். எனவே, நாம் சுயசார்பாக இருப்பது அவசியம்.
சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், 'ஜோஹோ' நிறுவனம் உருவானது. நுாற்றாண்டுகளுக்கு முன், விவேகானந்தர் சொன்னதும் இதை தான், நாட்டின் வளர்ச்சி, இன்றைய இளைஞர்களின் கையில் தான் உள்ளது.
எனவே, இளைஞர்கள் 18 வயது முதல் பெற்றோரை சார்ந்திருக்காமல், சுயசார் புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், பல்கலை வேந்தர் வெங்கடாசலம், இணைவேந்தர் செங்குட்டுவன், துணைவேந்தர் உமாசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.