ADDED : ஏப் 14, 2026 11:08 PM
சென்னை:சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
சேலம் மேற்கு தொகுதியில், ராமதாஸ் அணி சார்பில் போட்டியிடும், எம்.எல்.ஏ., அருளை ஆதரித்து, பள்ளப்பட்டி பகுதியில், ராமதாஸ் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மயக்கமடைந்தார். உடனடியாக, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்ற பின், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள், அவருக்கு பல கட்ட பரிசோதனைகள் செய்தனர். இந்நிலையில், ராமதாஸ் உடல்நிலையில் நேற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவர்கள் கண்காணிப்பில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
***
