/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சதுப்பு நிலத்தில் 'ராம்சார்' எல்லை பிரச்னை :வீடு வாங்க பணம் செலுத்தியோர் அவதி
/
சதுப்பு நிலத்தில் 'ராம்சார்' எல்லை பிரச்னை :வீடு வாங்க பணம் செலுத்தியோர் அவதி
சதுப்பு நிலத்தில் 'ராம்சார்' எல்லை பிரச்னை :வீடு வாங்க பணம் செலுத்தியோர் அவதி
சதுப்பு நிலத்தில் 'ராம்சார்' எல்லை பிரச்னை :வீடு வாங்க பணம் செலுத்தியோர் அவதி
ADDED : டிச 15, 2025 04:07 AM
சென்னை: 'ரா ம்சார்' தலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக் கரணை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி சதுப்பு நிலத்தில், புதிதாக கட்டட அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், வீடு வாங்க பணம் செலுத்தியோர் அவதிக்குள்ளாகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பாதுகாக்கப்பட்ட பகுதி யாக வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், 2022ல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 'ராம்சார்' தலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சர்வதேச அளவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குறித்த விபரங்கள் பகிரப்படுகின்றன.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 'ராம்சார்' எல்லை விபரங்களை கேட்டபோது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து சதுப்பு நிலத்தில் இருந்து, ஒரு கி.மீ., சுற்றளவுக்கு புதிதாக கட்டுமான அனுமதி வழங்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து இங்கு கட்டட அனுமதிக்கு உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.
ஆனால், இப்பகுதியில் ஏற்கனவே ஒப்புதலுடன் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்க, அதிகாரிகள் மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் தமிழக பிரிவு துணை தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு, 'ராம்சார்' அங்கீகாரம் கிடைத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் எல்லை வரையறை செய்யாதது அதிகாரிகளின் தவறு. இதனால், புதிய கட்டுமான திட்டங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு, 16 கிராமங்களில், 1,300க்கும் மேற்பட்ட சர்வே எண்களில் ஏற்கனவே ஒப்புதல் பெற்ற கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் அளிக்க, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மறுக்கின்றனர்.
வ ழக்கு, நீதிமன்ற உத்தரவு எதிலும் சம்பந்தப்படாத கட்டடங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுப்பது ஏன் என தெரியவில்லை. இதனால், இப்பகுதிகளில் வீடு வாங்க பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

