/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஞ்சனி ராதா பாட்டு கச்சேரி
/
ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஞ்சனி ராதா பாட்டு கச்சேரி
ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஞ்சனி ராதா பாட்டு கச்சேரி
ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஞ்சனி ராதா பாட்டு கச்சேரி
ADDED : ஜன 09, 2024 12:20 AM

வளசரவாக்கம், வளசரவாக்கம், அன்பு நகர் சக்தி பேலஸ் மண்டபத்தில், சக்தி சங்கீத சபாவின், 5ம் ஆண்டு மார்கழி இசை மற்றும் நாட்டிய விழா, ஜன., 1ல் துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.
இதில், வளரும் இசை கலைஞர் ரஞ்சனி ராதா வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது. காயத்ரி விபாவரி வயலின், சன்னத் பரமேஸ்வரன் மிருதங்கம் வாசித்து அசத்தினர்.
தியாகராஜர் இயற்றிய 'ராதா சேர ராவதே மிரா ராமய்ய' கீர்த்தனையை, ஆதி தாளம் ரீதிகவுளை ராகத்தில் பாடி, தன் கச்சேரியை துவக்கினார் ரஞ்சனி. பின், ஷியாமா சாஸ்திரி இயற்றிய, 'பிரணா வரளிச்சி' பாடலை, கல்யாணி ராகத்தில் ரூபகம் தாளத்தில் இசை மழையாக பொழிந்தார்.
தொடர்ந்து, கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய 'எந்நேரமும் உந்தன்' பாடலை தேவகாந்தாரி ராகம் ஆதி தாளத்தில் பாடினார். தியாகராஜர் இயற்றிய 'ராம பானா' கீர்த்தனையை சாவேரி ராகம், ஆதி தாளத்தில் பாடி ரசிகர்களை, தன் வாய்ப்பாட்டால் கவர்ந்தார்.