/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேங்கிங் கேரம் 438 வீரர்கள் உற்சாகம்
/
ரேங்கிங் கேரம் 438 வீரர்கள் உற்சாகம்
ADDED : நவ 28, 2024 12:16 AM

சென்னை,
பிராட்வேயில் நேற்று துவங்கிய, மாவட்ட அளவிலான ரேங்கிங் கேரம் போட்டியில், பல்வேறு பிரிவுகளில், 438 வீரர், வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்ட கேரம் சங்கம் ஆதரவில், டான்பாஸ்கோ இளைஞர் மையம் சார்பில், மாவட்ட அளவிலான, 'ரேங்கிங்' எனும் தரவரிசை கேரம் போட்டி, பிராட்வேயில் உள்ள மையத்தில், நேற்று காலை துவங்கியது.
போட்டியில், இருபாலருக்கான ஒற்றையர், பதக்கம் அல்லாத பிரிவு மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட சப் - ஜூனியர் இருபாலர் பிரிவுகளில் தனித்தனியாக நடக்கின்றன.
நேற்று துவங்கிய முதல் போட்டியை, டான்பாஸ்கோ மையத்தின் இயக்குனர் கிரிகோரி தேவராஜம், சென்னை மாவட்ட கேரம் சங்க தலைவர் மரியா இருதயம், பொதுச் செயலர் அமுதவாணன் ஆகியோர் துவக்கினர்.
இதில், சீனியர் பிரிவில், 104 பேர், பதக்கம் அல்லாத பிரிவில், 164 பேர், பெண்கள் பிரிவில் 36 பேர், 14 வயது சிறுவரில் 104 பேர், சிறுமியிரில் 30 பேர் என, மொத்தம் 438 வீரர், வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். போட்டிகள் தொடர்ந்து, டிச., 1 வரை நடக்கிறது.