/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
8 வயது சிறுமியிடம் அத்துமீறியவருக்கு '5 ஆண்டு'
/
8 வயது சிறுமியிடம் அத்துமீறியவருக்கு '5 ஆண்டு'
ADDED : ஜன 31, 2024 12:29 AM
சென்னை, மயிலாப்பூர் பகுதி பெண், தனியார் மருத்துவமனையில் 2017ல், தன் கணவரை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். அப்போது, 10 வயது மகன் மற்றும் 8 வயது மகளையும் அழைத்து சென்றுள்ளார்.
கணவரை ஆப்பரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்றபோது, மனைவியும் உடன் சென்றுள்ளார். அறையில் தனியாக இருந்த சிறுமியை, மருத்துவமனை 'வார்டு பாய்' அசோக் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 48, என்பவர், கேன்டீனுக்கு அழைத்துச் சென்று, பிஸ்கட் வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். செய்துள்ளார்.
மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், வெங்கடேசனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, வெங்கடேசனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.