/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு
/
சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு
ADDED : ஜன 06, 2024 12:08 AM
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரம் பகுதியில், 9 வயது சிறுமி, 2018ம் ஆண்டு, ஆக., 2ம் தேதி இரவு 11:00 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், 22, என்பவர், சிறுமி வீட்டிற்கு சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சின்ன காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடந்து வந்தது.
நேற்று நடந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பெருமாளுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,௦௦௦ ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தமிழரசி தீர்ப்பு அளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக, ௧ லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின், பெருமாளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.