/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நகரில் குஞ்சு பொரிக்கும் அரிய வகை 'வக்கா' நீர்ப்பறவை
/
அண்ணா நகரில் குஞ்சு பொரிக்கும் அரிய வகை 'வக்கா' நீர்ப்பறவை
அண்ணா நகரில் குஞ்சு பொரிக்கும் அரிய வகை 'வக்கா' நீர்ப்பறவை
அண்ணா நகரில் குஞ்சு பொரிக்கும் அரிய வகை 'வக்கா' நீர்ப்பறவை
ADDED : டிச 09, 2025 05:34 AM

சென்னை: இரவில் உணவு தேடும் அரிய வகை 'வக்கா' எனும் நீர்ப்பறவை, அண்ணா நகரில் சாலையோர மரங்களில் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது தெரியவந்துள்ளது.
நகர்ப்புற வளர்ச்சி யால் நீர்நிலைகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படு கின்றன. இதனால், நீர் நிலைகளை சார்ந்து வாழும் பறவைகளும், ஆபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கிலத்தில் 'நைட் ஹெரான்' என்றும், தமிழில் 'வக்கா' என அழைக்கப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை நீர்ப்பறவை, சென்னையில் இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நகர் முதலாவது அவென்யூ அருகில் உட்புற தெரு ஒன்றில், சாலையோர மரத்தில் இருந்து ஒரு பறவை குஞ்சு கீழே விழுந்துள்ளது.
இதை பார்த்த அக்கம்பக்கத்து மக்கள், அந்த குஞ்சு பறவையை மீட்டு தங்களால் இயன்ற முதலுதவியை அளித்து ஆசுவாசப்படுத்தினர்.
அதன்பின், வேளச்சேரி யில் உள்ள வனத்துறை அலு வலகத்தில் அந்த பற வையை ஒப்படைத்தனர். அப்போது தான் அது, 'வக்கா' வகையைச் சேர்ந்த பறவை என்பது தெரியவந்தது .
இது குறித்து 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
அங்குள்ள மரங்களில், எட்டு இடங்களில் வக்கா பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்துள்ளது தெரியவந்தது. 70 ஆண்டுகளுக்கு முன், இப்பறவைகள் சென்னையில் பரவலாக காணப்பட்டன. தற்போது, இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் உள்ள அண்ணா நகரில், சாலையோர மரங்களில் இவை காணப்படுவது, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

