ADDED : டிச 05, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்: அம்பத்துார், காந்தி நகர், கல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன், 50. இவர், அண்ணா நகரில் உள்ள அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ரேஷன் கடை கிடங்கில் கணக்காளராக பணிபுரிந்தார்.
நேற்று காலை கிடங்கிற்கு 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில் சென்றார். அப்போது, எதிர் திசையில் வந்த தனியார் தண்ணீர் லாரி, பாரதிதாசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தவர் மீது, லாரியின் டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியுடன் ஓட்டுனர் தப்பினார்.
தப்பியோடிய திருநெல்வேலியை சேர்ந்த லாரி ஓட்டுனர் இசக்கி பாண்டியன், 36 என்பவரை திருமங்கலம் போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.