/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கான்கிரீட் கூரை விழுந்து ரேஷன் ஊழியர் படுகாயம்
/
கான்கிரீட் கூரை விழுந்து ரேஷன் ஊழியர் படுகாயம்
ADDED : அக் 31, 2025 01:40 AM

வண்ணாரப்பேட்டை:  ரேஷன் கடையின் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்ததில், பெண் ஊழியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை, விஜயராகவன் தெருவில், வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழ், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், நாம்கோ ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. 40 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்பதால், அதன் கூரை சிதிலமடைந்து உள்ளது.
நேற்று முன்தினம் மாலை, திடீரென கட்டடத்தின் கான்கிரீட் கூரை பெயர்ந்து, இரண்டு கிலோ எடையிலான கட்டட இடிபாடு, ரேஷன் கடையின் விற்பனையாளரான ஜெயந்தி, 50, தலையில் விழுந்தது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக, காயமடைந்த ஜெயந்தியை மீட்ட சக ஊழியர்கள், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இக்கட்டடம் சேதமானது குறித்து, பலமுறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்து, ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

