/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊதிய உயர்வு வேண்டும் ரேஷன் ஊழியர் கோரிக்கை
/
ஊதிய உயர்வு வேண்டும் ரேஷன் ஊழியர் கோரிக்கை
ADDED : மே 15, 2025 11:52 PM
சென்னை:மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில், 25,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.
ஆனால், பணிச்சுமை அதிகம். கடந்த 2015 வரை ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
பின், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு தருவதாக, அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவு எடுத்தனர். அப்படியும், 2020ல் ஊதிய உயர்வு வழங்காமல் தாமதமாக, 2021 பிப்ரவரியில் தான் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதுவும் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டது.
விலைவாசி உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அதிக செலவாகிறது. எனவே, ஏற்கனவே இருந்தது போல மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப, இந்த ஆண்டே ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.