/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவீஸ்வரர் கோவில் குளம் மேம்பாட்டு பணி துவக்கம்
/
ரவீஸ்வரர் கோவில் குளம் மேம்பாட்டு பணி துவக்கம்
ADDED : ஏப் 10, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவில் குளம் படிக்கட்டுகள் முழுதும் உடைந்து, மோசமான நிலையில் இருந்தது. குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1.35 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.
தற்போது 2வது கட்டமாக, பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்ச ரூபாய் செலவில் கோவில் குளம் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக பூமி பூஜை செய்யப்பட்டு, நேற்று பணிகள் துவங்கின.
கோவில் குளத்தை சுற்றி, நடைபாதை மேல் நிழற்கூரை அமைத்தல், குளியலறை, கழிப்பறை, உடைமாற்றும் அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.

