/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவீஸ்வரர் கோவில் திருமண மண்டபம் திறப்பு
/
ரவீஸ்வரர் கோவில் திருமண மண்டபம் திறப்பு
ADDED : மே 23, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி :சென்னை வியாசர்பாடியில் உள்ள மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோவில், 1,200 ஆண்டுகள் பழமையானது.
இந்தகோவில் சன்னிதி தெருவில் சிதிலமடைந்த நிலையில் இருந்த கட்டடம் இடிக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாயில், திருமண மண்டபம் கட்டும் பணி, 2023 ஆகஸ்டில் துவங்கியது.
தரைதளத்துடன் இரண்டு மாடிகள் கொண்ட, 'ஏசி' வசதியுடன் கூடிய திருமண மண்டப கட்டுமான பணிகள் முடிந்தன.
திருமண மண்டபத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் பழனி, இணை ஆணையர் முல்லை, எம்.எல்.ஏ., சேகர், செயலர் அலுவலர் சிவபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.