ADDED : ஆக 25, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
எம்.கே.பி.நகர், ஆக. 26-
எம்.கே.பி.நகரில் வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட மல்லிகை குடியிருப்பு, 36வது பிளாக்கின் குடிநீர் இணைப்பு குடிநீர்வாரிய அதிகாரியின் ஒப்புதல் மூலம் சில தினங்களுக்கு முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த பிளாக்கில் வசித்த, 12 குடும்பத்தினர் குடிநீர் இன்றி அவதிப்பட்டனர்.
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் குடிநீர் வாரிய அதிகாரி மீது புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தவறு நடந்தது உறுதியானது. துண்டித்த இணைப்பை மீண்டும் தர வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
––––––––––––
