/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
/
ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
ராமர் கோவில் திறப்பு முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
ADDED : ஜன 15, 2024 01:57 AM
சென்னை:அயோத்தியில் வரும் 22ம் தேதி ஸ்ரீராம் மந்திர் திறப்பு விழா, ராமர் சிலை பிராண பிரதிஷ்டை வைபவம் நடக்கிறது. இதை கொண்டாடும் வகையில், டாக்டர் டி.ஜே.ஸ்ரீதரனின் ஆன்மிக உரையுடன், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோதிர விசேஷ பாராயண நிகழ்வு நடக்க உள்ளது.
வரும் ஜன., 21ம் தேதிக்குள், 100 கோடி விஷ்ணு நாமங்களுக்கு சமமாக, 10 லட்சம் முறை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை உச்சரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கடந்த 7ம் தேதி துவங்கியது. இந்த இலக்கை எட்ட உலகம் முழுதும் உள்ள விஸ்வாஸ் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
எனவே, வரும் 21ம் தேதி வரை தினமும் குறைந்தபட்சம் நான்கு முறை, பக்தர்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யலாம் அல்லது ஜன., 18ம் தேதி முதல், நான்கு நாட்கள் தினமும் எட்டு முறை பாராயணம் செய்யலாம்.
பாராயணம் செய்து முடித்ததும், https://bit.ly/Jai_Shri_Ram என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி படிவத்தை பதிவிடலாம்.
வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தினத்தன்று, சென்னை மற்றும் பிற பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும், ராம ஜபமும் காலை 10:00 மணி முதல் நடக்கிறது.
திருவல்லிக்கேணி, சிங்கராச்சாரி தெரு ராகவேந்திரா சபா மண்டபத்தில், காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை ஏகதின கோடி விஷ்ணு நாம பாராயணமும் நடக்க உள்ளது. இதற்கான பதிவு படிவத்தை https://forms.gle/xrqULX1apAd1zi8C6 இணைய தள முகவரியில் பெறலாம்.
மதியம் 12:30 மணிக்கு ராம ஜன்ம மூர்த்திக்கு ஆரத்தி வைபவமும் நடைபெற உள்ளது. அயோத்தியில் ராம ஜென்மபூமியில் நெடுங்காலமாக நாம் எதிர் நோக்கி காத்திருந்த ராமர் கோவிலை கொண்டாடும் வகையில், நாம் மேற்கொள்ளும் இந்த பாராயண வைபவத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, விஸ்வாஸ் சாரிட்டபுள் டிரஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.