ADDED : ஜன 09, 2024 12:27 AM

அயப்பாக்கம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி, பேரறிஞர் அண்ணா எழில்மிகு பசுமை பூங்கா வளாகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இதில், நாட்டுப்புறகலைஞர்களின் நையாண்டி, தவில் நாதஸ்வரம், பம்பை உடுக்கை மேளம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக, 1,009 பானைகளில் பொங்கல் வைத்து, உலக சாதனை நிகழ்த்தினர்.
பேரறிஞர் அண்ணா பசுமை பூங்காவின் நடைபாதையில், 1.2 கி.மீ., துாரத்துக்கு மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் உட்பட 5,000 பெண்கள் இந்த சாதனையை நிகழ்த்தனர்.
இதற்காக, ஒரு லட்சம் கரும்பு, 1,000 வாழை மரம், மஞ்சள் கிழங்கு மற்றும் மலர்களால் பூங்கா முழுதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் மாரி செல்வராஜ், தி.மு.க., - எம்.பி. டி.ஆர்.பாலு, ஊராட்சி மன்ற தலைவர் துரைவீரமணி, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.