sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்

/

ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்

ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்

ரயிலில் அடிபட்டு காதலன் பலி துக்கத்தில் காதலி தற்கொலை: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்


UPDATED : பிப் 11, 2026 10:06 AM

ADDED : பிப் 11, 2026 06:26 AM

Google News

UPDATED : பிப் 11, 2026 10:06 AM ADDED : பிப் 11, 2026 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்: 'ரீல்ஸ்' மோகத்தால், வாலிபர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் அவரது காதலி தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

அயனாவரம், சோலையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 50; ஓட்டுநர். இவரது மூத்த மகள் சுப்பு சவுமியா, 20, அண்ணா சாலையில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தார்.

இளைய மகள் சவுந்தர்யா, அதேபகுதியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். தாய் உயிரிழந்த நிலையில், தந்தை அரவணைப்பில் இருவரும் வளர்ந்து வந்தனர்.

நேற்று முன்தினம், சுப்பு சவுமியா கல்லுாரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியவர், அறையின் கதவை தாழிட்டு கொண்டார்.

பின், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது தங்கை சவுந்தர்யா, பலமுறை கதவை தட்டியும், திறக்கவில்லை.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, சுப்பு சவுமியா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அயனாவரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர்.

அதில், சுப்பு சவுமியா, கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த சதீஷ்குார், 22, என்பவரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 4ம் தேதி சேத்துப்பட்டு அருகில் ரயில் முன், 'ரீல்ஸ்' மோகத்தில் சதீஷ்குமார் வீடியோ எடுத்தபோது, ரயிலில் அடிபட்டு காயமடைந்தார். பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், சுப்பு சவுமியாவை, காதலனின் இறுதி சடங்கில் பங்கேற்க அவரது தந்தை ஜெகதீசன் மறுத்ததாக தெரிகிறது. காதலன் இறந்த துக்கமும், கடைசியாக அவரை பார்க்க முடியாமல் போனதால் மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us