/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தி வைத்து 'ரீல்ஸ்' இளைஞர்கள் கைது
/
கத்தி வைத்து 'ரீல்ஸ்' இளைஞர்கள் கைது
ADDED : ஜூன் 15, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இருவர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியை காட்டி மிரட்டும் தொனியில் இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ புளியந்தோப்பு போலீசாரின் கவனத்திற்கு சென்றது.
விசாரித்த போலீசார், வீடியோ வெளியிட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான், 19, முகமது பைசல், 19, ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்கு பின், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.