தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'இஸ்கான்' கோடை பயிற்சி முகாமிற்கு பதிவு துவக்கம்

 'இஸ்கான்' கோடை பயிற்சி முகாமிற்கு பதிவு துவக்கம்

 'இஸ்கான்' கோடை பயிற்சி முகாமிற்கு பதிவு துவக்கம்


ADDED : ஏப் 12, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'இஸ்கான்' சார்பில், சிறார்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம், 'ஆன்லைன்' மற்றும் நேரடி வகுப்பாக துவங்கவுள்ளது.

இஸ்கான் எனும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், இந்த ஆண்டுக்கான கோடைக்கால பல்சுவை முகாம், 'ஆன்லைன்' மற்றும் நேரடி வகுப்பாக, ஏப்ரல் - மே மாதங்களில், தலா 10 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

இதில், 6 - 12, 13 - 17 வயது என, இரண்டு பிரிவாக முகாம் நடத்தப்படுகிறது.

தமிழ், ஆங்கில மொழிகளில் சிறார்களுக்கு கதைகள், பாட்டுகள், பஜனைகள், நெருப்பில்லாத சமையல், கலை , கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து போதிக்கப்படுகிறது.

அதேபோல், 13 - 17 வயதிற்கு உட்பட்டோருக்கு கருத்துக்களை வலியுறுத்தும் கதைகள், விவாதம், ஆன்மிக அமர்வுகள், விளையாட்டுக்கள் கற்று தரப்படுகின்றன.

பங்கேற்பு சான்றிதழும் உண்டு. 'வாட்ஸாப்' மற்றும் 'இ - மெயில்' வாயிலாக, பாடங்கள், கதைகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

விருப்பமுள்ளோர், www.bps.fun/summer-camp/ எனும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம். விபரங்களுக்கு, 80725 99295 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இஸ்கான் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us