/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்டெம் செல்' தானத்தால் சிறுவனுக்கு மறுவாழ்வு
/
'ஸ்டெம் செல்' தானத்தால் சிறுவனுக்கு மறுவாழ்வு
ADDED : செப் 28, 2024 12:42 AM

சென்னை, திருச்சி மாவட்டம், பாப்பாப்பட்டியை சேர்ந்த ஏழை விவசாயி சங்கர் - ஜானகி. இவர்களின் 11 வயதான மூத்த மகன், 'பர்கோனி அனீமியா' என்ற அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, 'எலும்பு மஜ்ஜை செயலிழப்பால்' படுத்த படுக்கையான நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று பிரிவு பொறுப்பாளர் அருணா ராஜேந்திரன் குழுவினர், சிறுவனை பரிசோதித்து, 'ஸ்டெம் செல்' சிகிச்சை மட்டுமே தீர்வு என்பதை கண்டறிந்தார்.
சிறுவனின் பெற்றோரின், 'ஸ்டெம் செல்' பொருந்தாத நிலையில், டி.கே.எம்.எஸ். - பி.எம்.எஸ்.டி., அறக்கட்டளையின் உதவியுடன், பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் ஸ்மிதா ஜோசி என்பவரின், 'ஸ்டெம் செல்'களை தானம் பெற்று, சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.
இந்நிலையில், ஸ்டெம்செல் தானம் அளித்த டாக்டர் ஸ்மிதா ஜோஷி, டாக்டர் அருணா ராஜேந்திரன், அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி பேட்ரிக் பால் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, சிறுவனின் பெற்றோர், டாக்டர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.