தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/உறவினர் மண்டை உடைப்பு கார் ஓட்டுநருக்கு ‘கம்பி’

உறவினர் மண்டை உடைப்பு கார் ஓட்டுநருக்கு ‘கம்பி’

உறவினர் மண்டை உடைப்பு கார் ஓட்டுநருக்கு ‘கம்பி’


UPDATED : அக் 07, 2026 05:20 AM

ADDED : அக் 07, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 05:20 AM ADDED : அக் 07, 2026 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மடிப்பாக்கம்: உறவினரை மரக்கட்டையால் தலையில் தாக்கிய கார் ஓட்டுநரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மடிப்பாக்கம் கைவேலி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆன்டனி, 35; ‘டாடா ஏஸ்’ ஓட்டுநர். இவரது உறவினர் ஜெயசீல் ராஜ், 22; கார் ஓட்டுநர். ஆன்டனி, கடந்த இரு வாரங்களுக்கு முன் ஜெயசீல் ராஜிடம் 2,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இதில் 1,000- ரூபாயை திருப்பிச் செலுத்திய நிலையில், மீதமுள்ள 1,000- ரூபாயை பணப் பரிவர்த்த்னை செயலியான, ‘கூகுள் பே’ மூலம் நேற்று முன்தினம் இரவு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் இருவரும் மதுபோதையில் இருந்தபோது, பணம் கிடைக்கவில்லை எனக் கூறி ஆன்டனியிடம் ஜெயசீல் ராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர், கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆன்டனியின் தலையில் பலமாகத் தாக்கினார்.

பலத்த காயமடைந்த ஆன்டனி, மடிப்பாக்கம் சரஸ்வதி மருத்துவமனையில் எட்டு தையல்களுடன் சிகிச்சை பெற்றார். புகாரின்படி, மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெயசீல் ராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us